--- --:--:-- --

காதலிக்க மறுப்பு.. பள்ளி மாணவி குத்திக் கொலை

6

ராணிப்பேட்டை அருகே புலிவலத்தை சேர்ந்த ஜெகத்குமார் மகள் ஜனனி  10-ம் வகுப்பு படித்துள்ளார். நேற்று திடீரென இளைஞர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து அவரை கத்தியால் குத்தியதில் ரத்த வெள்ளத்தில் பலியானார்.

 

சத்தம் கேட்டு வந்த அப்பகுதியினர், கொலையாளியான திருவள்ளூரை சேர்ந்த சுப்பிரமணியை (21) தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். கைது செய்து விசாரித்ததில், காதலிக்காததால் கொன்றதாக கூறியுள்ளார்.

Right Menu Icon