அரசு கல்லூரிகளில் சேர அவகாசம் நீட்டிப்பு..!
பள்ளிப்படிப்பு முடிந்து, கல்லூரிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கான அவகாசம் நேற்று மாலையுடன் முடிவடைய இருந்தது.
இந்நிலையில், மாணவர்கள் நலன் கருதி இந்த அவகாசத்தை வருகிற 31-ம் தேதி வரை உயர்கல்வித்துறை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காமல் இருந்தோர் உடனே விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.





