--- --:--:-- --

ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!

2.1

ங்கம் விலை நேற்று அதிகரித்து விறக்கப்பட்ட நிலையில் இன்று விலை குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த ஏப்ரல் மாதத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை, மே மாதத்தில் சற்று சரிவை சந்தித்தது. உலக பொருளாதார சூழல்களும், பங்குச்சந்தைகளும் தங்கம் விலையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது.

 

மேலும் நாடுகளுக்கிடையிலான போர் பதற்றங்கள், அமெரிக்காவின் அடுத்தடுத்த அறிவிப்புகள் அனைத்தும் சில நாட்களாக இல்லாத நிலையில், மீண்டும் தங்கம் விலை தற்போது சரிந்து வருகிறது.நேற்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.45 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,995க்கும், சவரனுக்கு ரூ. 360 அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் ரூ.71,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

இந்த நிலையில், இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அன்படி இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,935-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.71,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.55 குறைந்து, ஒரு கிராம் ரூ.7360-க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து, ஒரு சவரன் ரூ. 58,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

வெள்ளி விலையில் மாற்றமேதுமின்றி,, ஒரு கிராம் வெள்ளி ரூ. 111க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Right Menu Icon