--- --:--:-- --

வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!

1

மிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 27 ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்கூட்டியே 25 ஆம் தேதிக்குள் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான நிலையில், வங்கக்கடலில் வரும் 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்றும் கணித்துள்ளது.

 

தமிழ்நாட்டில் கத்தரி வெயில் தொடங்கியது முதலே அதை தணிக்கும் விதமாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை உட்பட சில மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே தென் மேற்கு பருவமழை கேரளாவில் இன்னும் இரண்டு நாட்களில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் இருப்பதாகவும், அதே சமயத்தில் தமிழ்நாட்டில் சில பகுதிகளிலும் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

கோவா – தெற்கு கொங்கன் கடலோர பகுதி மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Right Menu Icon