ஜெயலலிதா மணிமண்டபத்திற்கு தடை: சசிகலா குற்றச்சாட்டு
2024, ஜனவரியில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று, கோடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்தோம் எனக் கூறிய சசிகலா, ஏதேதோ காரணங்களைக் கூறி இதற்கு திமுக அரசு தடை விதித்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.
கோடநாடு எஸ்டேட் சென்ற அவர், 2026-ல் மீண்டும் அம்மாவின் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவேன், அதற்கான முழு முயற்சிகளையும் தான் எடுத்துவருவதாக சூளுரைத்தார்.






