--- --:--:-- --

தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை தெரியுமா?

3

வேலூர், கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் – நிகோபார் தீவுகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 13-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

 

இந்நிலையில், மேற்கு திசை வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அப்போது, மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில், நாளையும், நாளை மறுநாளும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

இதேபோல, சேலம், நாமக்கல் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் நாளை மறுநாள் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும், தமிழ்நாட்டின் இயல்பு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு குறைவு எனவும், சென்னையில் சில இடங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

 

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வேகம் வரை சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Right Menu Icon