சித்திரை திருவிழாவுக்கு ஊருக்கு போறீங்களா?
மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு, தெற்கு ரயில்வே தாம்பரம்-மதுரை இடையே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளும் நிகழ்வு வரும் மே 12ஆம் தேதி நடைபெறுகிறது.
ஏற்கனவே மே 8ஆம் தேதி மீனாட்சி திருக்கல்யாணமும், மே 9ஆம் தேதி தேரோட்ட வைபவமும் நடைபெற்றது. இந்த நிலையில், மதுரை சித்திரை விழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்விற்காக சிறப்பு ரயில் இயக்கம்.சித்திரை திருவிழாவிற்கு 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மதுரைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், ரயில்வே நிர்வாகம் இன்னும் நிறைய சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதன் படி, தாம்பரத்தில் இருந்து மதுரைக்கு ரயில் எண் 06049 இன்று இரவு 11.30 மணிக்கு புறப்படும். அது மறுநாள் காலை 7.55 மணிக்கு மதுரையை அடையும். மதுரையில் இருந்து தாம்பரத்திற்கு ரயில் எண் 06050 மே 12-ந் தேதி இரவு 11.30 மணிக்கு புறப்படும். அது மறுநாள் காலை 7.50 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.
இந்த ரயில்களில் AC 2-tier கோச்சுகள் இரண்டு உள்ளன. 16 sleeper கோச்சுகளும், இரண்டு இரண்டாம் வகுப்பு கோச்சுகளும் உள்ளன. இந்த ரயில்கள் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல் மற்றும் கொடைக்கானல் ரோடு ஆகிய ஊர்களில் நிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




