முதல்வருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது – நயினார் நாகேந்திரன்
முதல்வருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்றும், எப்போதும் பாஜக – அதிமுக கூட்டணியை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார் என்றும் தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதை நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம்.
முதல்வர் இதில் எந்தவித அக்கறையும் காட்டவில்லை. ஈரோடு முதிய தம்பதியினர் கொலை சம்பவம், நெல்லையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலை சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதற்கு சான்றான சம்பவம்.முதலமைச்சர் பாஜக – அதிமுக கூட்டணியை குறை சொல்வதை மட்டுமே முதல்வர் செய்து வருகிறார். நேற்று நடந்த பாராட்டு விழாவில் கூட அதைத்தான் சொல்லியுள்ளார்.
சட்டம் ஒழுங்கு சரியில்லை, மாணவர்கள் போதை பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர். திருநெல்வேலியில் குடிப்பதற்கு 15 நாளைக்கு ஒருமுறை தண்ணீர் வருகிறது. இதையெல்லாம் முதல்வர் அக்கறையோடு பார்க்காமல் தேர்தல் கூட்டணி பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். முதல்வருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.” என்று பேசினார்.





