இன்று முதல் கத்தரி வெயில் ஆரம்பம்..!
தமிழ்நாட்டில் கத்தரி வெயில் இன்று தொடங்கும் நிலையில் வெப்பம் மிதமாகவே இருக்கும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் 11 இடங்களில் நேற்று வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் கொளுத்திய நிலையில், கோடைக்காலத்தின் உச்சகட்டமான கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது.
நேற்று மாநிலத்திலேயே அதிகபட்சமாக வேலூரில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. திருத்தணியில்104 டிகிரி, சென்னை மீனம்பாக்கத்தில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. திருச்சி மற்று மதுரையில் 103 டிகிரி ஃபாரஹீட்டும், நாகையில் 101 டிகிரி பாரன்ஹீட் அளவுகு வெயில் வாட்டியது.
இந்நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்கி வரும் 28 ஆம் தேதி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. அடுத்த 25 நாட்கள் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இதனிடையே, தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அப்போது, 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கோவை, நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்கள் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.
இதேபோல், தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களிலும் நாளை கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை ஒட்டி இருக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.





