--- --:--:-- --

பாமக மாநாட்டிற்கு விசிக தலைவர் திருமாவளவனுக்கு அழைப்பு..!

1

பாமக மாநாட்டிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மே 11 ஆம் தேதி மாமல்லபுரம் அருகே பாமக சார்பாக நடைபெறவுள்ள சித்திரை முழு நிலவு மாநாட்டு அழைப்பிதழை, அக்கட்சியின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் சரவணன் விசிக தலைவர் திருமாவளவனிடம் வழங்கினார்.

 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அரக்கோணம் வழியாக சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியாக வந்த ராணிப்பேட்டை பாட்டாளி மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணன், விசிக தலைவர் திருமாவளவனிடம் சித்திரை முழு நிலவு மாநாட்டு அழைப்பிதழை வழங்கினார்.

 

இதனை இன்முகத்தோடு பெற்றுக் கொண்ட விசிக தலைவர் திருமாவளவன், மாநாடு சிறப்பாக நடக்க தனது வாழ்த்துக்களை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ் அவர்களுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

 

அரசியலில் இரு துருவங்களாக பாமகவும் விசிகவும் இருந்து வரும் நிலையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் விசிக தலைவரை சந்தித்து கட்சியின் மாநாட்டுக்கு அழைப்பிதழை வழங்கியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Right Menu Icon