5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு..!
5 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், சில மாவட்டங்களில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், மாலை 4 மணி வரை கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், தருமபுரி, நீலகிரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என IMD குறிப்பிட்டுள்ளது.





