திமுகவில் இருந்து நிர்வாகி பி.தியாகராஜன் அதிரடி நீக்கம்..!
கொலை மிரட்டல், பண மோசடி உள்ளிட்ட புகார்களில் சிக்கிய திமுக நிர்வாகி பி.தியாகராஜன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளராக இருந்த தியாகராஜன் மீது பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்திருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வர்த்தகர் அணியின் மாவட்ட துணை அமைப்பாளர்களாக இருந்த சக்கரவர்த்தி, தணிகைவேல் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




