தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்..!
தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் இயல்பை விட 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு படிப்படியாக வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வரும் 18ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் இயல்பை விட 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு படிப்படியாக வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும், இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




