--- --:--:-- --

சமத்துவத்தை நோக்கி நம் சமூகம் வேகமாக நகர வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

2

முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், “சாதிய ஏற்றத் தாழ்வுகள் – தீண்டாமை குற்றங்கள் – உள்ளிட்டவற்றிற்கு எதிராக முழங்கிவர் புரட்சியாளர் அம்பேத்கர். பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாகவும், அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாகவும் கொண்டாடுகிறோம். சமத்துவத்தை நோக்கி நம் சமூகம் வேகமாக நகர வேண்டும்” என்றார்.

 

தொடர்ந்து பேசுகையில், ஒவ்வொருவரின் உள்ளத்திலேயும் மாற்றத்திற்கான சிந்தனை வலுப்பெற வேண்டும்.புரட்சியாளர் அம்பேத்கரை உயர்த்திப் பிடித்து, கொண்டாடும் இயக்கம்தான், திராவிட இயக்கம்! இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில், டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி என பெயர் சூட்டியவர் கலைஞர் சமூகநீதி, சமத்துவம், தலித் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறோம்.சென்னை சைதாப்பேட்டையில் எம்.சி.ராஜா பெயரில் மாணவர் விடுதியை திறந்து வைத்துள்ளேன்” என்றார்.

Right Menu Icon