--- --:--:-- --

தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு..!

2

100 நாள் வேலை திட்டம் ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் உயர்த்தப்பட்டுள்ள சம்பள விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.கிராமப்புற வறுமை ஒழிப்பிற்காக மத்திய அரசு கடந்த 2005ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை இயற்றியது.

 

இந்த சட்டத்தின் கீழ், 100 நாள் வேலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை வைத்திருப்பவர்கள் வேலை கோரினால் அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை இந்த திட்டம் அளிக்கிறது. 100 நாட்கள் வேலை தர அரசு தவறினால், பாதிக்கப்பட்டவருக்கு முதல் 30 நாட்களுக்கு சம்பளத்தில் கால் பங்கும், மேலும் தவறினால் பாதி ஊதியத்தை அபராதமாக அரசு தர வேண்டும்.

 

இத்திட்டத்தின் கீழ் 25.25 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். இதில், 14.35 கோடி பேர் செயலில் உள்ள தொழிலாளர்களாக உள்ளனர்.100 நாள் வேலை திட்டத்தில் வழங்கப்பட்டு வரும் ஊதியம் ரூ.319 ஆக உள்ளது. இதனை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 17 ரூபாய் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்டதன் மூலம் ரூ. 319 ஆக இருந்த 100 நாள் வேலை திட்ட ஊதியம் தற்போது ரூ.336 ஆக அதிகரித்து வழங்கப்படும் என்றும், ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் இந்த ஊதிய உயர்வு நடைமுறைக்கு வரும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

2 சதவீதம் முதல் 7 சதவீதம் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டுக்கு 5.33 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் 100 நாள் வேலை திட்டத்துக்கு ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகபட்சமாக ஹரியானா மாநிலத்தில் உயர்த்தப்பட்ட ஊதியத்தை அடிப்படையில் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.400 சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon