--- --:--:-- --

திருப்பூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!

8

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக, வெயில் சுட்டெரித்து வந்தது. இதனிடையே நகரின் சில பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக, பரவலாக மழைபெய்து வருகிறது.

 

இந்நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, திருப்பூர் மாவட்டத்தில் சில இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon