--- --:--:-- --

அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மக்களின் கவனத்திற்கு..!

3

சென்னையில் அடையாறு பெருங்குடி சோழிங்கநல்லூரில் நாளை முதல் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

 

இதனால் சென்னையில் உள்ள அடையாறு, பெருங்குடி, சோளிங்கநல்லூர் பகுதிகளில் உள்ள சில இடங்களில் நாளை முதல் 26 ஆம் தேதி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

 

எனவே அந்த பகுதி மக்கள் முன்னெச்சரிக்கையாக போதுமான அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற இளையதளத்தில் பதிவு செய்யலாம் என்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும். குடிநீர் வினியோகம் தடை இன்றி தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon