பாகிஸ்தானுக்கு நீர்மூழ்கி கப்பல் வழங்கிய சீனா!
பாகிஸ்தானுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வரும் சீனா, தற்போது அந்நாட்டுக்கு அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை வழங்கியுள்ளது. பாகிஸ்தானுடனான ஒப்பந்தத்தின்படி, இன்னும் 6 நீர்மூழ்கி கப்பல்களை அந்நாட்டுக்கு சீனா வழங்க வேண்டும். இது தவிர, 4 போர்க் கப்பல்களையும் பாகிஸ்தானுக்கு சீனா வழங்கியுள்ளது.
அரபிக் கடலில் இந்தியாவின் ஆதிக்கத்தை தடுப்பதற்காக பாகிஸ்தானின் கடற்படையை சீனா வலுப்படுத்துவதாக கூறப்படுகிறது.





