சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததது ஏன்?
அதிமுகவில் பிளவு இல்லை எனவும் நாங்கள் எப்போதும் ஒற்றுமையாக இருக்கிறோம்முதலமைச்சர் ஆளுநர் உரை விவாதத்தில் 2 மணி நேரம் 52 நிமிடம் பேசியது குறித்து விளக்கம் அளித்த எடப்பாடி, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகமாக இருந்ததால் தான் அவ்வளவு நேரம் பேச வேண்டியிருந்ததாகக் கூறினார்.
சட்டமன்றத்தில் தான் பேசிய முழு காணொளியையும் தர மறுத்து சில நிமிடங்கள் மட்டுமே கொடுத்ததாகவும் குற்றம் சாட்டினார். எனவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சபாநாயகர் அப்பாவுவுக்கு எதிராக அதிமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.
இந்த வாக்கெடுப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “பேரவைத் தலைவர் அதிமுக உறுப்பினர்களின் கோரிக்கைகளைப் புறக்கணிப்பதாகவும், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அனுமதி மறுப்பதாகவும்” அவர் குறிப்பிட்டார்.
திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றதாகவும், வரி உயர்வு, டாஸ்மாக் வருவாய் அதிகரிப்பு இருந்தும் புதிய திட்டங்கள் இல்லையென்றும் எடப்பாடி குற்றம் சாட்டினார். 10 ஆண்டுகளில் அதிமுக 5 லட்சம் கோடி மட்டுமே கடன் பெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.





