சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ₹1,000 கோடி மதுபான ஊழல் குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என அதிமுக எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்தனர். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், அதிமுகவினரின் பேச்சு எதுவும் அவைக்குறிப்பில் இடம் பெறாது என சபாநாயகர் அறிவித்தார்.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்து அதிமுகவினர் முழக்கமிட்டதால் அமளி நிலவியது. தொடர்ந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.






