பணத்திற்காக சிறுவர்களை விற்ற தந்தை.. ஆந்திர நபர் கைது..!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ரூ.80,000 பணத்திற்காக 2 சிறுவர்களை வாத்து பண்ணையில் தந்தை விற்ற சம்பவம் தெரியவந்துள்ளது. சைல்டு ஹெல்ப் லைனுக்கு வந்த தகவலை அடுத்து சிறுவர்களை அதிகாரிகள் மீட்டனர்.
சிறுவர்களை கொத்தடிமையாக பயன்படுத்திய ஆந்திராவைச் சேர்ந்த விஜயகுமார் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலையை சேர்ந்த மணி என்பவர் தனது மகன்கள் இருவரையும் ரூ.80,000 பணத்தை பெற்றுக் கொண்டு வாத்து பண்ணையில் வேலை செய்வதற்காக விற்றதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.





