நோன்பு இருந்து தொழுகையில் ஈடுபடும் விஜய்..!
தமிழக வெற்றி கழகம் சார்பில் சென்னையில் இன்று இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்காக நடிகர் விஜய் இன்று ஒரு நாள் நோன்பு கடைப்பிடித்து தொழுகையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றி கழகம் சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று மாலை இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் உள்ள இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை பொதுச் செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். தவெக சார்பில் நடைபெறும் இந்த இப்தார் நோன்பில் 3000 மாணவர்களுக்கு பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இஃப்தாரை முன்னிட்டு இன்று ஒரு நாள் நடிகர் விஜய் நோன்பு மேற்கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.






