அண்ணாமலையார் கோயிலில் குடும்பத்துடன் அமலாபால் தரிசனம்..!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகை அமலாபால் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பில் மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது.
அமலா பாலுடன் பொதுமக்கள் கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் புகைப்படம் செல்பியும் எடுத்துக் கொண்டனர். மகாசிவராத்திரி நிறைவடைந்துள்ள நிலையில் அண்ணாமலையார் கோயிலில் பிரபலங்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.






