--- --:--:-- --

யாரிடமும் பாஜக மறைமுகமாக பேசவில்லை – அண்ணாமலை

1

நாங்கள் யாரிடமும் மறைமுகமாக பேசவில்லை. பாஜகவை பொறுத்தவரை தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலம் இருக்கிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது அவரிடம், “பாஜகவுடன் கூட்டணி இல்லை என சொல்லிவந்த எடப்பாடி பழனிசாமி, இரு தினங்களுக்கு முன்பாக ஆறு மாதங்களுக்கு பிறகு பேசிக்கொள்ளலாம் என சொல்கிறார். ஒருவேளை கூட்டணி குறித்து மறைமுகப் பேச்சுவார்த்தை ஏதும் நடக்கிறதா?” என கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதில் அளித்து பேசிய அண்ணாமலை, “நாங்கள் யாரிடமும் மறைமுகமாக பேசவில்லை.

 

2024-ல் வலிமையான தேசிய ஜனநாயக கூட்டணியை பார்த்தீர்கள். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘ஓட்டுகளை சிந்தாமல் சிதறாமல் ஒருங்கிணைக்க வேண்டிய வேலை இருக்கிறது’ எனும் ஒரு கருத்தை முன்வைத்துள்ளார்.

 

பாஜகவை பொறுத்தவரை தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலம் இருக்கிறது. தற்போது கட்சியின் அடிப்படை வேலைகளை பார்த்துக்கொண்டிருக்கிறோம். தேசிய ஜனநாயக கூட்டணி எப்படி இருக்கும், இதில் எப்படிப்பட்ட தலைவர்கள் இருப்பார்கள், எந்தெந்தக் கட்சிகள் அங்கம் வகிக்கும் என்பதை எல்லாம் நேரம் வரும்போது பேசுவோம்” என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon