ஆட்டோ டிரைவருடன் நடுரோட்டில் வாக்குவாதம்..!
பெங்களூரில் தன் கார் சேதமடைந்ததால் கோபமடைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் நடுரோட்டில் ஆட்டோ ஓட்டுநருடன் வாக்குவாதம் செய்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தனது குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் பெங்களூருவில் உள்ள சாலையில் ராகுல் டிராவிட் தனது காரில் சென்று கொண்டிருந்த பொழுது அந்த சாலையில் வந்த சரக்கு ஆட்டோ ஒன்று வேகமாக காரின் முன் பகுதியில் உரச லேசாக சேதமடைந்தது. உடனே காரில் இறங்கி ஆட்டோ டிரைவரிடம் காரின் முன் பகுதியை காண்பித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆட்டோ டிரைவரும் ராகுலுக்கு பதில் சொல்லிக்கொண்டே இருந்தார். சம்பவத்தை அறிந்து அந்த பகுதியினர் அந்த இடத்தில் கூறினார். பின்னர் டிரைவரின் வீட்டு முகவரி செல்போன் எண் ஆகியவற்றை பெற்றுக் கொண்ட டிராவிட் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தரப்பில் எவ்வித புகார் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. ஆனால் ராகுல் வாக்குவாதம் செய்ததை கண்ட ஒருவர் நடந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





