சயிப் அலிகானை கத்தியால் குத்திய நபர் கைது..!
பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தானேவில் உள்ள பிரபல பார் ஒன்றில் பணிபுரிந்து வந்த விஜய தாஸ் என்பவரை கைது செய்த பாந்த்ரா போலீசார், நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே சந்தேகத்தின் பேரில் இருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




