நடிகையின் கார் மோதி ஒருவர் பலி..!
பிரபல மராத்தி நடிகை ஊர்மிளா கொதாரேவின் கார் விபத்துக்குள்ளானது. மும்பையில் மெட்ரோ பணி செய்த 2 ஊழியர்களின் மீது கார் மோதியதில், சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியான நிலையில், மற்றொருவர் படுகாயமடைந்தார்.
அதேபோல், ஊர்மிளாவும், அவரது டிரைவரும் காயமடைந்த நிலையில், அனைவரும் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டுள்ளனர். அதிவேகமாக பயணித்ததே விபத்திற்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




