--- --:--:-- --

அடுத்தவன் பைக்கில் காதலியுடன் சென்ற இளைஞர்..!

4

சிங்கிள் பாட்டில் விலை உயர்ந்த பைக்கை திருடி காதலியுடன் சுற்றித்திரிந்த இளைஞரை பாதிக்கப்பட்டவர் மடக்கி பிடிக்க முயன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

 

விருதுநகரை சேர்ந்த குருசேத் என்பவர் செங்கல்பட்டு மகேந்திரா சிட்டி பகுதியில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த நான்காம் தேதி செங்கல்பட்டு ரயிலில் வைத்து தனது விலை உயர்ந்த பைக்கை நிறுத்திய நிலையில் திடீரென காணாமல் போனது குறித்து செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார்.

 

செங்கல்பட்டு நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது காணாமல் போன தனது பைக்கை இளைஞர் ஒருவர் இளம் பெண்ணுடன் பயணிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அவரை மடக்கிப் பிடிக்க முயன்ற பொழுது அந்த இளைஞர் வேகமாக பைக்கை திருப்பி தப்பி சென்றார்.

 

அவரின் பின்னால் இருந்த நண்பர் அதனை வீடியோவாக எடுத்த நிலையில் அந்த ஆதாரத்தை அவர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார். திருடிய பைக்கில் இளைஞர் தனது காதலியுடன் உலா வந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon