கொடைக்கானலில் தொடங்கியது உறை பனிக்காலம்..!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் உறை பனி காலம் தொடங்கியது. கடந்த இரண்டு நாட்களாக 8 டிகிரி இருக்கும் மேலாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
உறை பனி காலம் காரணமாக ஈரப்பதம் மிகுந்த சதுப்பு நிலங்களில் உள்ள புல்வெளிகள் சிறு செடிகளில் இரவில் வரும் நீர் துளிகள் அப்படியே உறைந்து பனிகளாக அடர்ந்து காணப்படுகிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் குளிர் நிலவுகிறது.
குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் அழகு கொஞ்சம் சாலையில் உல்லாச நடை போட்டும் புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





