சாலையில் நடந்து சென்ற பெண்ணை முட்டி தள்ளிய மாடு..!
ஆவடி அருகே அய்யப்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை இரண்டு மாடுகள் முட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஷோபனா என்ற பெண் வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது அங்கு நின்ற மாடுகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு ஷோபனாவை முட்டி தூக்கி வீசியதால் அதில் காயமடைந்தார். பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.






