அரசு சொத்தை விலை பேசினேனா? – விக்னேஷ் சிவன் கொடுத்த விளக்கம்
புதுச்சேரியில் அரசு சொத்தை தான் விலை பேசியதாக வெளியான தகவல்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் மறுத்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
புதுச்சேரி விமான நிலையத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்கவே சென்றதாகவும் அப்பொழுது மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர் லக்ஷ்மி நாராயணனை சந்தித்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
அப்பொழுது தன்னுடன் வந்திருந்த மேலாளர் தனிப்பட்ட முறையில் அமைச்சரிடம் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ள விக்னேஷ் சிவன் இந்த விவகாரத்தில் தன்னை பற்றி வெளியான மீம்ஸ் மற்றும் ஜோக்ஸ் நகைச்சுவையாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான கட்டிடத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் விலை பேசியதாக சமீபத்தில் செய்து வெளியானது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





