கருவறைக்கு வெளியே நில்லுங்கள்..இளையராஜாவுக்கு தர்ம சங்கடம்..!
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற திவ்ய பாசுரம் இசை கச்சேரியில் பங்கேற்க இசையமைப்பாளர் இளையராஜா அங்குள்ள புகழ்பெற்ற ஆண்டாள் கோவிலில் வழிபாடு நடத்தினார்.
அங்கு நடைபெற்ற விழாவில் இளையராஜா இசையமைத்து பாடிய திவ்ய பாசுரம் இசை கச்சேரியும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக வந்திருந்த இளையராஜா ஆண்டாள் கோவிலில் தரிசனத்திற்காக சென்றார்.
அவருக்கு பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது. ஹைதராபாத்தை சேர்ந்த சின்ன ஜீயர் ஆண்டாள் கோயிலில் உள்ள மணவாள சடகோபர் ராமானுஜ ஐயரும் பங்கேற்றனர். அப்பொழுது ஜியர்கள் கருவறைக்குள் சென்ற பொழுது இளையராஜாவும் உள்ளே சென்றார்.
இதனை கண்ட ஜீயர்களும் பக்தர்களும் இளையராஜாவை கருவறைக்கு வெளியே இருக்குமாறு கூறினார். அதன் பிறகு கருவறைக்கு வெளியே சென்ற இளையராஜா அங்கிருந்தபடியே வழிபாடு செய்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





