--- --:--:-- --

நண்பர்களுடன் குளிக்க சென்ற மாணவன் நீரில் மூழ்கிய பரிதாபம்..!

4

கடலூரில் நண்பர்கள் 4 பேருடன் குளிக்க சென்று ஐடிஐ மாணவர் குளத்தில் மூழ்கி மாயமான நிலையில் அவரைத் தேடும் பணி 4 மணி நேரமாக நடந்து வருகிறது. இது குறித்து கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி காணப்படுகிறது.

 

இதனால் நீர் நிலையில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ செல்பி எடுக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். கடந்த ஒரு வாரத்திற்கு பிறகு இன்று பள்ளி, கல்லூரிகள் கடலூரில் திறக்கப்பட்டது.

 

நான்கு மாணவர்கள் குளத்திற்கு சென்றுள்ளனர். தென்பெண்ணை ஆற்றில் மாணவர்கள் குளித்து விளையாடிக் கொண்டிருந்த பொழுது கதிர் என்ற மாணவர் தண்ணீரில் மூழ்கியுள்ளார். தீயணைப்புத் துறையியினர் மூழ்கிய இளைஞரை தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon