ஓட்டுநர் கண் அயர்ந்ததால் நடந்த கோரம்..ஜேசிபி மீது மோதிய அரசு பேருந்து..!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டி விளக்கு பகுதியில் முன்னாள் சென்ற ஜேசிபி வாகனம் மீது அரசு விரைவு பேருந்து மோதிய விபத்தில் 15 பேர் காயம் அடைந்தனர்.
திருப்பதியில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தின் ஓட்டுநர் கண் அயர்ந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் பேருந்து முன் பகுதியில் ஜேசிபி எந்திரத்தின் பின்பக்கமும் சேதமடைந்தன. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





