புதுச்சேரி – கடலூர் சாலையில் மீண்டும் போக்குவரத்து துண்டிப்பு..!
புதுச்சேரி, கடலூர் சாலை போக்குவரத்து மீண்டும் துண்டிக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர் புதுச்சேரியில் பெஞ்சல் புயல் காரணமாக சூறாவளி காற்றுடன் அதீத கன மழை கொட்டி தீர்த்தது.
இதனால் புதுச்சேரி முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக புதுச்சேரி கடலூர் சாலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட போக்குவரத்து பின்னர் மீண்டும் பொது மக்களின் செயல்பாட்டிற்கு வந்தது.
தற்போது இடையர்பாளையத்தில் உள்ள தரைப்பாலத்தில் ஏற்பட்ட விரிசலால் புதுச்சேரி கடலூர் செல்லும் பாதை துண்டிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





