--- --:--:-- --

சாலை வளைவில் திரும்பும் பொழுது கட்டுப்பாட்டை இழந்து விபத்து..!

6

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சாலை வளைவில் திரும்பும் பொழுது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.

 

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ், மனைவி ரத்தினம்மாள், மகன் அபிநவ் ஆகியோருடன் கோவிலுக்கு சென்று திரும்பும் பொழுது விபத்தில் சிக்கி உள்ளார்.

 

மூவரும் தலைக்கவசம் அணியாத நிலையில் பள்ளத்தில் இருந்து பாறை மேல் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு ஏற்பட்டதாக காவல் நிலைய போலீசார் தெரிவித்தனர்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon