ஆட்டை கடித்து விழுங்கிய 12 அடி நீளம் மலைப்பாம்பு..!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மலை பாம்பு கடித்த ஆடு உயிரினத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பூசாரிபட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் ஆறு ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்பொழுது ஒரு ஆட்டுக்குட்டி அலறல் சத்தம் கேட்டு பாலசுப்ரமணியன் ஓடி சென்று பார்த்த பொழுது சுமார் 12 அடி நீளம் மூலம் மலைப் பாம்பு ஒன்று ஆட்டுக்குட்டியை கடித்துள்ளது. உடனே இது குறித்து பாலசுப்பிரமணி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
விரைந்து வந்தவர்கள் மலை பாம்பை நீண்ட நேரம் போராடி பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனால் அந்த பகுதி வாசியினர் நிம்மதி அடைந்தனர். இருப்பினும் ஆடு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.






