ரஷ்ய ராணுவத்தில் இருந்து 85 இந்தியர்கள் விடுவிப்பு..!
ரஷ்ய ராணுவத்தில் இருந்து இதுவரை 85 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். மீதமுள்ள 20 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
BRICS மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபருடன் இந்தியர்களை விடுவிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.






