தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்..எதுகை, மோனையில் பேச வேண்டாம்..கமல்ஹாசன் கண்டனம்..!
நீங்கள் வெறுப்பை கக்கினால் தமிழ் நெருப்பை கக்கும் என்று தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் குறித்து கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் மட்டுமல்ல தேசிய கீதத்திலும் திராவிடம் இடம்பெற்றிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
அரசியல் செய்வதாக நினைத்து திராவிட நல் திருநாடு எனும் வார்த்தைகளை விட்டுவிட்டு பாடியது தமிழ்நாட்டின் தமிழக மக்களையும் இந்தியாவின் பெருமையாக விளங்கும் உலகின் தொன்மையான தமிழ் மொழியையும் அவமதிக்கும் செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
நீங்கள் வெறுப்பை கழகினால் தமிழ் நெருப்பை காக்கும் என்று கமல்ஹாசன் காட்டமாக பதிவிட்டுள்ளார்.






