--- --:--:-- --

பள்ளி மாணவர்களை விரட்டி விரட்டி கடித்த தேனீக்கள்..!

8

தருமபுரியில் தேனீக்கள் கடித்து பள்ளி மாணவர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் மாங்கரை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் நேற்று வழக்கம்போல் மதிய உணவு அருந்த வெளியே சென்றனர்.

 

அப்பொழுது பள்ளி வளாகத்தில் இருந்த மரம் ஒன்றில் தேனீக்கள் இருந்துள்ளது. இதனை கவனிக்காத மாணவர்கள் அங்கு விளையாடிக் கொண்டிருந்த நிலையில் தேனீ கூடு கலைந்து தேனீக்கள் மாணவர்களை கடிக்க துவங்கியது.

 

இதனால் காயமடைந்த மாணவர்களை ஆசிரியர்களுடன் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி நேரில் வந்து மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து மருத்துவரிடம் கேட்டிருந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon