தொண்டையில் சிக்கிய தைல டப்பா..உயிருக்கு போராடிய குழந்தை..!
மதுரையில் இரண்டரை வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய தைல டப்பாவை அரசு மருத்துவர் 15 நிமிடம் போராடி வெளியே எடுத்தார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த ரோஜா தோட்டம் பகுதியில் சேர்ந்த பானு இவரது இரண்டரை வயது பெண் குழந்தை தைல டப்பாவை வாயில் போட்டுள்ளது.
தைல டப்பாவானது குழந்தையின் தொண்டையில் சிக்கியதால் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு குழந்தையானது கொண்டு செல்லப்பட்டது.
அங்கிருந்த அரசு மருத்துவர் 15 நிமிடம் போராடி தைல டப்பாவை வெளியில் எடுத்தார். துரிதமாக செயல்பட்ட மருத்துவருக்கு குழந்தையின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





