துபாய்க்கு புறப்பட இருந்த விமானத்தில் கரும்புகை..!
சென்னையில் இருந்து துபாய்க்கு புறப்பட இருந்த விமானத்தில் புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 280 பயணிகளோடு எமிரேட்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது.
அப்பொழுது விமானத்தில் இருந்து கரும்புகை வெளிவந்தது. உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் புகையை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கோளாறை சரி செய்யும் படி மேற்கொள்ளப்பட்டது. விமானத்தில் 280க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த பொழுதே பழுது நீக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
எஞ்சின் பகுதியில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டதை தொடர்ந்து விமானம் பறக்க தயானானது. தீவிர சோதனைக்கு பிறகு விமானம புறப்பட அனுமதி அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 3 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 12.40 மணிக்கு புறப்பட்டு சென்றது.






