இருசக்கர வாகனத்தின் மீது ஆம்னி கார் மோதிய விபத்தில் இருவர் படுகாயம்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது ஆம்னி கார் மோதிய விபத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் விபத்துக்கான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. பைக்கில் சென்று அரசம்பட்டியை சேர்ந்த சின்னசாமி மாரப்பன் படுகாயம் அடைந்தார்.
கரூரை சேர்ந்த ஐந்து இளைஞர்களுக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது. வேலூர் பொற்கோயிலுக்கு சென்று விட்டு கரூருக்கு திரும்பும் பொழுது விபத்து நேரிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம்னி கார், பைக் மீது மோதி சிறிது தூரம் இழுத்துச் செல்லும் சிசிடிவி பதிவாகியுள்ளன.






