--- --:--:-- --

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகள் என்ன..?

3

samsung தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் இரண்டாவது வாரத்தை எட்டி இருக்கும் நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வரும் 26ம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஏசி, வாஷிங் மெஷின், டிவி தயாரிக்கப்பட்டு வருகின்றனர். 1500க்கு மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர்.

 

தொழிற்சாலையில் கடந்த ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் சிஐடியுதொழில் சங்கம் தொடங்கப்பட்டது. சங்கமம் அமைப்பதற்கான அறிமுக கடிதம் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டது. மேலும் ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கைகள் குறித்து நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டது. இதை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள்.

 

தொழிலாளர்களுக்கு எதிரான போக்கை கைவிட வேண்டும். ஊதிய உயர்வுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்துகின்றனர் சாம்சங் தொழிலாளர்கள். தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 15 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காலவரம்பற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு samsung நிறுவனம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது. உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் ஊதியப்படி தான் பணி நீக்கம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்தது.

 

இதுவரை சாம்சங் நிறுவனம் தொழிலாளர் நலத்துறை மற்றும் நிர்வாகிகள் என தொழிலாளர்களுடன் மூன்று முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

 

Right Menu Icon