--- --:--:-- --

திருவாடானையில் மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து..!

12

திருவாடானை தாலுகா, தொண்டி அருகே சோழியக்குடி லாஞ்சியடி மீனவர்கள் மீன் பிடிக்க 21ம் தேதி சென்றதில் கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

 

உடன் சக மீனவர்கள் 5 க்கும் மேற்பட்ட படகுகளில் சென்று கடலில் தத்தளித்த  படகு உரிமையாளர்  காளிமுத்து மகன் காளி கண்ணன், உடன் சென்ற பாஸ்கரன், மதியழகன், கந்தன், ராபின்சன், நவனேஷ்  ஆகியோர்களை பத்திரமாக மீட்டு கரை சேர்ந்தனர்.

 

இன்று 4 விசை படகில் சென்று   4 படகுகளும் ஒன்றுடன் ஒன்று கயிற்றால் இணைத்து கவிழ்ந்த விசை படகை மீட்டு இன்று மாலை கரைக்கு கொண்டு வந்தனர்.

Right Menu Icon