உடுமலை ரயில் நிலையம் அருகில் தீ விபத்து..!
உடுமலை ரயில் நிலையம் வடபுறம் குப்பைகள் அதிக அளவு தேக்கமடைந்து இருந்தது. இந்த நிலையில் மர்மநபர்கள் சிலர் குப்பைகளுக்கு தீ வைத்ததால் இப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது.
சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை தீயணைப்புத் துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில் இப்பகுதியில் குப்பைகளை கொட்ட நகராட்சி நிர்வாகம் தடை விதிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




