--- --:--:-- --

வாங்கிய கடனை திருப்பி தராததால் 2 சிறுவர்கள் கொலை..!

4

ஆத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 14 ஆயிரம் ரூபாய் கடனுக்காக நண்பரின் இரண்டு குழந்தைகளை நபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யோகராஜுக்கு யோக தர்ஷன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

 

யோகராஜ் நண்பரான வசந்த் குமார் சிறுவர்கள் இருவருக்கும் தின்பண்டம் வாங்கி தருவதாக கூறி வெளியே அழைத்து சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் வீடு திரும்பாததால் பதறிப்போன யோகராஜ் குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.

 

வசந்தகுமார் மற்றும் சிறுவர்கள் இருவரை காவல் துறையினர் தேடிய பொழுதும் செங்கல்பட்டு அருகே செங்காத்தம்மன் கோயிலில் யோகராஜ் இரு மகன்களும் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். தகவலறிந்து யோகராஜன் குடும்பத்தினர் அதிர்ச்சியில் நிலை குலைந்தனர்.

 

வசந்தகுமாரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். யோகராஜ் வாங்கிய 14,000 ரூபாய் திருப்பி தராத காரணத்தால் அவரது மகன்களை வசந்தகுமார் கொலை செய்தது தெரிய வந்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon