ஒரே நேரத்தில் பறிபோன 4 குழந்தைகளின் உயிர்..!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அடையப்பாலம் கிராமத்தில் ஏரியில் மூழ்கி நான்கு சிறார்கள் உயிரிழந்தனர். பள்ளி விடுமுறை என்பதால் 12 வயது மோகன் தனது எட்டு வயது தந்தை மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 10 வயது கார்த்திகா அவரது ஐந்து வயது தங்கை தன்சிகாவுடன் அதே பகுதியில் உள்ள ஏரிக்கு சென்றுள்ளார்.
ஏரியில் இறங்கி குளித்த பொழுது ஆழமான பகுதிக்கு சென்று அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. குழந்தைகள் காணாமல் பெற்றோரை தேடி உள்ளனர்.
அப்பொழுது அந்த பகுதியில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் சிலர் ஏரிக்கரையில் இருப்பதை கண்டு சந்தேகத்தில் இறங்கி தேடி சடலங்களை மீட்டனர். ஏரியில் அதிகப்படியான மணல் திருட்டு நடைபெற்றதால் அதிக ஆழம் ஏற்பட்டு குழந்தைகள் உயிரிழந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





