H.ராஜாவை கண்டித்து நாளை போராட்டம்: காங்கிரஸ்
பாஜக மூத்த தலைவர் H.ராஜாவை கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ராகுல் காந்தியின் அமெரிக்க பயணம் குறித்து இழிவாகவும், ராகுலை தேசத்துரோகி எனக் கூறியதை கண்டித்தும் போராட்டம் நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. முன்னதாக அமெரிக்காவுக்கு சென்று இந்தியாவை குறை கூறியதாக ராகுலை பாஜக விமர்சித்தது.





