சிறுமியை மிரட்டி காரில் கடத்திய பாலியல் தொல்லை..!
பழனியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். பழனியில் 17 வயது கல்லூரி மாணவர் ஒருவர் தனது காதலனுடன் பேருந்தில் சென்றதை முஜிப் ரகுமான் என்பவர் வீடியோ மற்றும் போட்டோ எடுத்துள்ளார்.
பின்னர் அந்த சிறுமி கல்வி நிலையத்திற்கு சென்ற பொழுது அவரை வழிமறித்து காதல் விவகாரத்தை உனது தாயிடம் கூறிவிடுவேன் என மிரட்டி காரில் ஏற்றி சென்று பாலியல் தொல்லை தந்துள்ளார்.
இதனை சிறுமி தனது ஃபோனில் ஆடியோவாக பதிவு செய்த நிலையில் அந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவி வருகிறது. இந்த நிலையில் நடந்த சம்பவங்களை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.






